வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் விசேட கலந்துரையாடல்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை (5) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களின் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில், அப்பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன.

குறிப்பாக, எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.