சட்டத்தின் படியாக எல்லாம் நடைபெறும் நீதிமன்றை தீர்ப்பை மீறி எதுவும் நடைபெறாது என்று ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் தெரிவித்து இருக்கின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆகவே சட்டவிரோதமாக குடியேறிய மயிலத்தமடு, மாதவனை பகுதியிலிருக்கின்றவர்களை நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அவர்களை மேச்சல்தரை பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதான் எமது கொரிக்கையாகும்.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் வெள்ளிக்கிழமை(30) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனை ஆகிய மேச்சர்தரைப் பிரதேசத்தில் யுத்தத்துக்கு பின்னர் 2012 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் அம்பாறை மட்டும் பொலன்நறுவை மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் மேச்சல் தரைகளில் கால்நடைகளை பராமரிக்க முடியாத அளவிற்கு அத்துமீறிய வேலைகளை செய்து வருகின்றார்கள்.
அவர்கள் கால்நடைகளை சுடுவது வெட்டுவது காயப்படுத்துவது பண்ணையாளர்களை கடத்திச் செல்வது அச்சுறுத்துவது போன்ற செயபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அண்மையில் கால்நடை பண்ணையாளர் ஒருவர் இவ்வாறு கடத்தப்பட்டு பின்னர் மிகுந்த பிரியத்தின் மத்தியில் அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார். இவ்வாறு சட்டவிரோதமாக மேச்சல் தரைகளை பிடித்துள்ளவர்கள் ஆட்களை கடத்துகின்ற வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள்.
மேய்ச்சல்தரை விடயத்தில் ஒரு இன முருறுனை ஏற்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.
பண்ணையாளர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களை செய்கின்ற பொழுது அவர்களை நாம் சமாதானப்படுத்த முடிகின்றோமே தவிர மாறாக நிரந்தரமாக அத்துமீறி குடியேறியுள்ளவர்களை அங்கிருந்து அகற்ற முடியாமல் உள்ளது.
ஏறாவூர் நீதின்றம் அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை அகற்றுமாறு கூறியிருக்கின்றது. சட்டவிரோதமாக பயிர்செய்பவர்களை அவர்களுடைய பயிற்சிக்கு காலம் முடிவுற்றதும் அங்கிருந்து வெளியேற்றி விட வேண்டும் என கொழும்பு நீதி மேல் நீதிமன்றமும் தெரிவித்திருந்தது.
எனவே நீதிமன்றங்களின் தீர்ப்பையும் மீறி இன்னும் தொடர்ச்சியான செயற்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனவே நாம் கேட்பதெல்லாம் நீதிமன்றங்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுவே.
நாம் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியிடத்திலும் நீதிமன்றத்திலும் ஊடகங்கள் வாயிலாகவும்; இந்த விடயங்களை எடுத்துரைத்துள்ளோம்.
சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, ஊடகத்துறைக்குமாக இந்த விடயத்தை பொறுப்புள்ள நான்கு துறைகளிடமும் நாங்கள் ஜனநாயக அடிப்படையில் இந்த சட்ட விரோதிகளை வெளியேற்றுமாறு தெரிவித்தும்கூட அந்தவிடயங்கள் நடைபெற்று இருக்கவில்லை இது எவ்வாறு அமைந்தாலும் இப்போது இருக்கின்ற அரசாங்கத்திடம் நாங்கள் கேட்கின்ற விடயம் நீதிமன்ற தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் நாங்கள் கூறுகின்றோம். அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக ஒரு சுமுகமான நிலைமை ஏற்படும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
காடுகளை அழிக்கின்றார்கள், நெருப்பு வைக்கின்றார்கள், இவ்வாறு செய்து கால்நடைகளுக்கு உணவில்லாமல் நிலைமையை ஏற்படுத்தி வாழ்வாரத்தை இல்லாமல் செய்கின்றார்கள்.
எனவே பண்ணையாளர்கள், விவசாயிகள் என பலரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மட்டக்களப்பு கச்சேரி முன்பாக எதிர் வருகின்ற 2026.11.02 ஆம் திகதி காலையில் மட்டக்களப்பு கச்சேரி முன்பாக ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் அனைவiயும் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
எனவே ஜனாதிபதி அவர்கள், அமைச்சர்கள், பொறுப்பு வாய்ந்தவர்கள், அனைவரும் தலையீடு செய்து இதற்குரிய தீர்வினை காணவேண்டும் இந்த தீர்வு இல்லாத விட்டால் அரசாங்கத்திற்கும் எமக்குமான இடைவெளி மிகவும் அதிகரித்துச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
சட்டத்தின் படியாக எல்லாம் நடைபெறும் நீதிமன்றை தீர்ப்பை மீறி எதுவும் நடைபெறாது என்று ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் தெரிவித்து இருக்கின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆகவே சட்டவிரோதமாக குடியேறிய மயிலத்தமடு, மாதவனை பகுதியிலிருக்கின்றவர்களை நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அவர்களை மேச்சல்தரை பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதான் எமது கொரிக்கையாகும் என அவர் இன்போது தெரிவித்தார்.



