வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில் பெண் ஊழியர் மீது தாக்குதல் வீடியோ இணைப்பு

286
224 Views

வவுனியா, பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் இன்று காலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை நிலையத்தின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார்.

குறித்தபெண் ஊழியர் தனது பணியை மேற்கொண்டிருக்கையில், கண்ணாடிப் பொருள் ஒன்று தவறுதலாக கீழே வீழ்ந்து உடைந்துள்ளது.

இதையடுத்து வியாபார நிலையத்தின் உரிமையாளரின் மகன் குறித்த பணிப்பெண்ணை தாக்கியுள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் இச்சம்பவம் தொடர்பில் நியாயத்தன்மையை நிலைநாட்டுமாறு கோரியதுடன், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சி.சி.ரிவி காணொளியை பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட கடை உரிமையாளரின் மகனை கைது செய்துள்ளதோடு, தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த பெண் ஊழியர் வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த (35) இரண்டு பிள்ளைகளின் தாயாரென்பதும் குறிப்பிடத்தக்கது வயதுடையவர் எனத் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here