அண்மித்துள்ள வளிமண்டலக் கீழடுக்குக் கொந்தளிப்பினால் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி மேலும் தீவிரமடையவுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால் இன்று (21) புதன்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்தச் எச்சரிக்கையானது, நாளை (22) வியாழழக்கிழமை அதிகாலை 5:30 மணி வரை செல்லுபடியாகும்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடக்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டம் ஆகியவற்றில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிந்தைய வானிலை அறிக்கைகளைக் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



