இந்தியப்படை ஈழமண்ணில் 1987, அக்டோபரில் அரங் கேற்றிய படுகொலைகள் மறக்கமுடியாதவை இன்று 2026, அக்டோபர். 39, வது ஆண்டு நினைவு. இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்தில் 1987, தொடக்கம் 1990, வரை நடத்திய இனப்படுகொலைகள் 02/06/1987, தொடக்கம் 14/03/1990, வரை ஏறக்குறைய 370, தாக்குதல்களில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லபட்டனர்.
இதில் மறக்கமுடியாத அதிகூடிய படுகொலைகள் 1987, அக்டோபர் மாதம் மட்டும் 31, படுகொலைகள் அதாவது தினம் ஒரு படுகொலைகள் என்ற வீதம் இடம்பெற்றன.
1987, அக்டோபர் மாதம் அரங்கேறிய இனப்படுகொலைகள் விபரம்:
1. 11.10.1987 – புதுக்காட்டு சந்தி படுகொலை – சந்தி
2. 12.10.1987 – மல்லாகம் படுகொலை – கிராமம்
3. 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை – கிராமம்
4. 12.10.1987 – சுன்னாகம் படுகொலை – கிராமம்
5. 12.10.1987 – பிரம்படி படுகொலை – கிராமம்
6. 12.10.1987 – பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை)
7. 19.10.1987 – யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை – குடியிருப்புப் பகுதி
8. 19.10.1987 – கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை
9. 20.10.1987 – மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி
10. 20.10.1987 – கேரதீவு இறங்குதுறை தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி
11. 20.10.1987 – சுண்டுக்குளி தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி
12. 20.10.1987 – உரும்பிராய் தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி
13. 21.10.1987 – யாழ் மருத்துவர்கள் படுகொலை – மருத்துவமனை
14. 21.10.1987 – யாழ் மருத்துவமனைப் படுகொலை – மருத்துவமனை
15. 22.10.1987 – சுண்டுக்குளி தேடுதல் வேட்டை – குடியிருப்புப் பகுதி
16. 22.10.1987 – யாழ் மருத்துவமனை ஊழியர்கள் படுகொலை
17. 22.10.1987 – அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை
18. 22.10.1987 – சுண்டுக்குளி படுகொலை
19. 22.10.1987 – அராலித்துறை படுகொலை
20. 24.10.1987 – யாழ் மத்திய கல்லூரி மாணவர் லக்ஸ்மணன் படுகொலை
21. 24.10.1987 – கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை
22. 25.10.1987 – கொக்குவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது பீரங்கித்தாக்குதல்
23. 25.10.1987 – சேரதீவு படுகொலை
24. 5.10.1987 – சந்தை மீது உலங்கு வானூர்தித் தாக்குதல்
25. 25.10.1987 – இந்துக்கல்லூரி அகதி முகாம் படுகொலை
26. 26.10.1987 – சூறாவத்தை படுகொலை
27. 26.10.1987 – அளவெட்டி படுகொலை
28. 26.10.1987 – புத்தூர் படுகொலை
29. 26.10.1987 – அளவெட்டி படுகொலை
30. 26.10.1987 – புத்தூர் படுகொலை
31. 27.10.1987 – சாவகச்சேரி கந்தசட்டி கோயில் படுகொலை
இந்திய அமைதியப்படை இராணுவம் மிகமோசமான ஒரு படுகொலை என 1987, அக்டோபர் மாதம் முழுவதும் யாழ்குடா நாட்டில் இடம்பெற்ற வரலாறு உண்டு. இந்த படுகொலைகளில் மிலேச்சத்தனமான படு கொலையாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் நடந்த இனப்படுகொலை என்பது மறக்கமுடியாத துயரத்தை தந்த படுகொலையாகும்.
1987, அக்டோபர்,21, அன்று தீபாவளித்திருநாள் ஒரு விடுமுறை நாள் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை யில் அத்துமீறி நுழைந்த இந்திய அமைதிப் படை என்ற அடாவடி இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளி கள், தாதிகள், மருத்துவர்கள், மற்றும் பணியாளர் கள் உட்பட 60,பேர் அதே இடத்தில் அன்றே கொல்லப்பட்டனர் 19 பே ர் காயம் அடைந்தனர்.
இலங்கை மற்றும் சர்வதேச மனித உரிமைக் குழுக் கள் இப்படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூறினர். இந்த இனப்படுகொலைகளை செய்துவிட்டு அதனை நியாப்படுத்தி புலிகளுக்கும், இந்திய இராணு வத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளில் இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப். ஜெனரல் டெப்பிந்தர் சிங் பச்சைப்பொய்யை அப்போது கூறினார். இத்தாக்குதலை மேற்கொண்ட இந்திய இராணுவத்தினர் எவரும் இந்திய அரசால் கைது செய்யப்படவில்லை என்பதே வரலாறு.
கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம்:
01. வைத்தியர் அருணாசலம் சிவபாதசுந்தரம், (44 வயது)
02. வைத்தியர் சேதுசிகாமணி கணேசரட்ணம், , (29 வயது)
03 .வைத்தியர் கதிர்காமு பரிமேலழகர்,(40வயது)
04. இராமநாதன் மங்கையற்கரசி, தாதி (31 வயது)
05. திருமதி வடிவேலு, தாதி (48 வயது)
06. முத்தையா லீலாவதி,தாதி (28 வயது)
07. பரமநாதன், தாதி (28,வயது)
08. கந்தையா செல்வராஜா,மேற்பார்வையாளர் (56 வயது)
09. கணபதி கிருஸ்ணராஜா, மேற்பார்வையாளர் (50வயது)
10. இராசரத்தினம் இரத்தினராஜா, ஆய்வுகூடப் பணியாளர் (28 வயது)
11. வைத்திலிங்கம் சண்முகலிங்கம், அம்புலன்ஸ் சாரதி (49வயது)
12. கந்தையா வேதாரணியம், ஊழியர் (27 வயது)
13. கந்தன் மார்க்கண்டு,ஊழியர் (39 வயது)
14 .குருசுமுத்து ஜோன்பீற்றர்,ஊழியர் (24வயது)
15. கணபதி சிவலோகநாதன், ஊழியர் (23வயது)
16 .இராமலிங்கம் சுகுமார், ஊழியர் (24 வயது)
17. முத்துக்குமாரு துரைராஜா,ஊழியர் (26 வயது)
18. பொன்னம்பலம் வரதராஜன், ஊழியர் (28 வயது)
19. கோபாலப்பிள்ளை உருத்திரன்,ஊழியர் (24 வயது)
20. சின்னப்பு ஜெயநாதன்,ஊழியர் (36 வயது)
21. தங்கவேலு சவுந்தரராஜா, மாணவன், (06 வயது)
22. பெலீசியன் சதீஸ்யோகேந்திரன், மாணவன்,(15 வயது)
23. மார்க்கண்டு தியாகராசா,சாரதி, (48 வயது)
24. அந்தோனிமுத்து அந்தோனி, விக்ரர் க.தி.க பொறுப்பாளர், (35வயது)
25. சுப்பையா மாணிக்கம்,(79வயது)
26. அரியகுட்டி இராசரத்தினம், சாரதி,( 53வயது)
27. அரியரட்ணம் லில்லிநேசம்,(75வயது)
28. அல்பிரட் அந்தோனிப்பிள்ளை ,( 65வயது)
29. அல்பிரட் மேரியோசெப்பின், (37வயது)
30. ஜெபமணி கீதபொன்கலன், (43 வயது)
31. ஜோன் சின்னையா,தொழிலாளி,(65 வயது)
32. யோன் சிமியோன்,தச்சுவேலை,(67வயது)
33. தோம்ஸ் பேரின்பநாயகம் (51, வயது) பஸ்தியாம்பிள்ளை, முகாமையாளர்,(66 வயது)
34. செபஸ்தியன் தம்பிராஜா, கூட்டுறவுச்சங்க ஊழியர்,(55 வயது)
35. செல்லையா தங்கமணி, (58 வயது)
36. செல்லர் சிவபுரம், கமம், (48, வயது)
37. வேலுப்பிள்ளை சரவணமுத்து,(60வயது)
38. ஞானப்பிரகாசம் செந்தூர்முருகன், வியாபாரம், (40 வயது)
39. சுப்பிரமணியம் ஜெயமோகன், வியாபாரம்,(32 வயது)
40. சத்தியசீலன் ஜெயசீலன்,மாணவன், (17வயது)
41. சின்னத்தம்பி வேலுப்பிள்ளை,(75வயது)
42. சின்னவி சின்னத்துரை,(57 வயது)
43. சிவலை குணரட்ணம்,தபால்ஊழியர், (49வயது)
44. சூடாமணி ஆவுடையம்மா குடும்பப்பெண், (55 வயது)
45. இராஜதுரை மகேஸ்வரி, (46 வயது)
46. இராயப்பு சூசைப்பிள்ளை,ஓய்வூதியர், (74 வயது)
47. இராமசாமி இலங்கேஸ்வரன்,(25 வயது)
48. இராசு சுப்பிரமணியம்,(46 வயது)
49 .நடராஜா ஜெயசீலன்,(21 வயது)
50 .கந்தையா நவரட்ணம்,(50 வயது)
51. கந்தையா சிவராஜா, (25வயது)
52. கிருபாகரன் இந்திராணி, (32 வயது)
53. பஸ்தியாம்பிள்ளை யோன்அரியமலர்,(60 வயது)
54. பஸ்ரியாம்பிள்ளை நொய்லா விஜயந்தி, (20வயது)
55. துரைச்சாமி இராஜேந்திரா,ஓய்வூதியர்,(70 வயது)
56. துரைச்சாமி மகேந்திரா,(73 வயது)
57. துரைச்சாமி ஆறுமுகம், (72 வயது)
58. தம்பிப்பிள்ளை கனகலிங்கம்,(64,வயது)
59. தம்பிப்பிள்ளை கிருபாகரன்,(33 வயது)
60 .தியாகராசா மதியரசன,(17வயது)
காயமடைந்தவர்களின் விபரம்:
01. யூலியஸ் பிரதீபன்,குழந்தை ,(06 மாதம்)
02. ந.அன்னம்,முதியவர், (90 வயது)
03. நா.நவரத்தினம்,தொழிலாளி,(54வயது )
04. நா.செல்லையா,தொழிலாளி,(21,வயது)
05. நடராசா தனபாலசிங்கம், கடை. (20 வயது)
06. நவரத்தினம் சந்திரகுமார், தொழிலாளி, (18,வயது)
07. பூ.விஸ்ணுதாசன்,(34,வயது)
08. பத்மநாதன் தனபாக்கியலட்சுமி, குடும்பப்பெண்(43,வயது)
09. பற்குணராஜா கமலா, மாணவி,(25,வயது)
10. தா.இராசேந்திரன், தொழிலாளி, (44,வயது)
11. மா.அன்னலட்சுமி, வீட்டுப்பணி,(75, வயது)
12. அ. சண்முகராசா வியாபாரம், (26 வயது)
13. அ.கந்தசாமி, கிளினர்,(36, வயது)
14. கே.பாலையா,எலக்ரீசியன்,(44, வயது)
15. செ. பத்மநாதன்,முகாமையாளர்,(46 வயது)
16. செ.தவராஜன்,கமம், (22, வயது)
17. சின்னப்பொடி தெய்வானை,(65, வயது)
18. வா.மதிஜீவன், சாரதி, (23, வயது)
19. ராஜரட்ணம் ஜனார்த்தனன், மாணவன், (20 வயது)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, இலங்கை யின் வட மாகாணத்தில் மக்கள் அடர்ந்து வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் ஒரேயொரு மருத்துவமனை ஆகும். யாழ்ப்பாண நகர மத்தியில் அமைந்திருந்தது. ஈழப்போர்க் காலம் முழுவதும் இப்பகுதி போரில் ஈடுபடுபவர்கள் அணுகாத வண்ணம் பாதுகாக்கப் பட்ட ஒரு மருத்துவமனையாக இயங்கி வந்தது.
ஆனால் இந்திய இராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல் வைத்தியசாலையையும் விட்டுவைக்கவில்லை என்பதே வரலாறு இன்று 2026, அக்டோபர் 39, ஆண்டு.



