நிமலராஜனின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறையில் அஞ்சலி

WhatsApp Image 2026 10 19 at 9.11.44 PM 2 நிமலராஜனின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறையில் அஞ்சலி

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (19) திங்கட்கிழமை யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடக இல்ல செயலாளர் இரா.மயூதரன் தலைமையில் நடைபெற்றது.

பருத்தித்துறையில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்ல அலுவலகத்தில் இன்று (19) திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு ஊடக இல்ல தலைவர் கு.மகாலிங்கம் மாலை அணிவித்தார். பொதுச் சுடரினை ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

WhatsApp Image 2026 10 19 at 9.11.44 PM நிமலராஜனின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறையில் அஞ்சலி

இந்நிகழ்வில் பருத்தித்துறை உப நகரபிதா தே.தேவராஜேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் தினேஸ், நகரசபை உறுப்பினர்கள், யாழ். வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு.மகாலிங்கம், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

WhatsApp Image 2026 10 19 at 9.13.41 PM 2 நிமலராஜனின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறையில் அஞ்சலி

யாழ்குடா நாட்டில் தீவிர போர் சூழல் நிலவிய காலக்கட்டத்தில் துணிச்சலாக இராணுவ முற்றுகைக்குள் இருந்து ஊடகபப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து இரவு வேளையில் ஆயுததாரிகளினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

WhatsApp Image 2026 10 19 at 9.13.41 PM 4 நிமலராஜனின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறையில் அஞ்சலி

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் ஆகியும் அவரது படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. இதுபோன்று இலங்கையில் இடம்பெற்ற சகல ஊடகவியலாளர் மற்றும் ஊடக நிறுவன பணியாளர்களின் படுகொலைச் சம்பவங்கள், கடத்தல்கள், காணாமலாக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாது பாதுகாக்கப்பட்டு வருகின்றமை, இலங்கையின் உள்ளகப் பொறிமுறை மீதான நம்பிக்கையை அறவே இல்லாமல் செய்துள்ளது. எனவே இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுவதன் மூலம் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்கள் உடனடியாக முன்வர வேண்டும் என யாழ் வடமராட்சி ஊடக இல்லம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(60)