ஏமன் சென்ற படகு கவிழ்ந்ததில் 109 அகதிகள் உயிரிழப்பு

ஏமன் நாட்டை நோக்​கிச் சென்ற அகதிகள் படகு ஜிபூட்டி கடற்​கரை அருகே கவிழ்ந்த விபத்​தில், 15 குழந்​தைகள் உட்பட 109 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் காணா​மல் போன 116 பேரைத் தேடும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக அனைத்து சர்வதேச அகதி​கள் அமைப்​பான ஐஓஎம் நேற்று தெரி​வித்​துள்​ளது.

சுமார் 350 பேருடன் சென்ற அந்​தப் படகு அக்​டோபர் 8 மற்​றும் 9 ஆகிய  திகதிகளுக்கு இடைப்​பட்ட இரவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜிபூட்டி நாட்​டின் துறை​முக நகரான ஒபோக்​கிற்கு வடக்கே உள்ள குஹெரே பகுதிக்கு அரு​கில் இந்​தத் துயரச் சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.