யாழில் புதிய மதுபானசாலை திறப்பதற்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் மேற்கு சங்கானை பகுதியில் புதிதாக மதுபானசாலை திறப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை (09) சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களின் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் நான்கு புதிய மதுபானசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களையும், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதையும் எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.