சர்வதேச மதிப்பீட்டுக்கு தயாராகுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கு தயாராகுவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

ஒக்டோபர் 26 முதல் எதிர்வரும் நவம்பர் 06 வரை நடைபெறவுள்ள மதிப்பீட்டுக்கான தயார்நிலை, சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் மற்றும் செயல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆய்வு செய்யப்பட்டது.

மீதமுள்ள மூன்று வாரங்களில் குறைபாடுகள் மற்றும் தாமதங்களை சரிசெய்து, அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த மதிப்பீடு சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்