அனோஜனுக்கு சிறையில் கத்தியால் தாக்குதல் : அரசாங்கம் விரைவாக செயற்படவேண்டும் – சாணக்கியன்

”சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு சிறையில் கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தார் குறிப்பிடுகின்றனர். ஆனால் நக கீறல்களுடன் காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சவூதி சிறைச்சாலை தரப்பு குறிப்பிட்டதாக அமைச்சர் குறிப்பிடுகிறார். இவரது விடயத்தில் அரசாங்கம் விரைவாக செயற்படவேண்டும்” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

மேலும் விசேட குழுவை அனுப்புவதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது, இதற்கு சவூதி தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதா, அனோஜனை எவ்வழியிலாவது பாதுகாக்க வேண்டும். அதற்கான அரசாங்கம் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.