பிபில நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் தொடர்புடைய துப்பாக்கி, நகைகள், பணம், ஆயுதங்களின் பாகங்கள் மற்றும் சிம் அட்டைகள் உள்ளிட்ட 50 வழக்கு ஆவணங்கள் நீதிமன்ற வழக்கு ஆவண அறையிலிருந்து காணாமல் போயுள்ளன.
இது தொடர்பில் நீதிமன்றப் பதிவாளர் தயரத்ன பத்தேவிதான, வியாழக்கிழமை (01) காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன பொருட்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மொனராகலை சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



