வெள்ளத்தில் மூழ்கிய செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில்

190
104 Views

கன மழை மற்றும் மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில் நீரில் மூழ்கியுள்ளது.

அத்துடன் கதிர்காமத்தில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழைக் காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சிறிய வெள்ளம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெரங்கதொட்ட, மன்னம்பிட்டி பகுதிகளில் சிறிய வெள்ளம் ஏற்படும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால், வெலிகந்தை, சேருவில், மூதூர், லங்காபுர, மெதிரிகிரிய, கிண்ணியா, கந்தளாய், தமன்கடுவ, திம்புலாகல, பகுதிகளில் மகாவலி கங்கையின் இரு கரைகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here