மயிலிட்டி மக்கள் தங்களது இராணுவ பிடியிலிருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 23ஆவது வாரத்தையும் எட்டியுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எமது பிரச்சினைக்கு நேரடியாகத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



