சர்வதேச சூழ்நிலை எப்படி மாறினாலும், சீனாவும் இலங்கையும் எப்போதும் உண்மையான நண்பர்கள்!

சர்வதேச சூழ்நிலை எப்படி மாறினாலும், சீனாவும் இலங்கையும் எப்போதும் உண்மையான நண்பர்களாகவும் நல்ல பங்காளிகளாகவும் இருக்கின்றன. இந்நிலையில், எமது இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கியமான பொதுவான புரிதல்களைச் செயற்படுத்தவும் சீனா இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதோடு  இணைந்த பயணத்தைத் தொடர்ந்து புதிய அத்தியாயங்களை ஒன்றாக எழுதுவோம் என்று தூதுவர் வை ஹுவாசியாங் தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 77ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற வரவேற்பு உபசார நிகழ்வு நேற்று முன்தினம் இரவு ஷாங்கிரில்லா விடுதியில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.