இலங்கை 2030 ஆம் ஆண்டிற்குள் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், நாட்டின் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான தூண்களில் ஒன்றான மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் நாட்டின் உழைக்கும் வர்க்கமும் இன்னும் 1940களின் காலா வதியான சட்டங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்ற னர். அரசாங்கத்தின் இந்த ஏற்றுமதி இலக்கானது, உட னடியாக ஒரு நவீன வேலைவாய்ப்புச் சட்டத்தை அறி முகப்படுத்தாவிட்டால் அது “1940களின் தொழிலாளர் இயந் திரத்தின் மீது ஓய்வெடுக்கும் பளபளப்பான சிறுபுத்தகம்” ஆக மாறும் அபாயம் உள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணைத் தலைவர் பரத் அருள்சாமி கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தொடர்ச்சியான கள ஆய்வை முன்னெடுத்து வரும் அவர், விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகப் பொருளாதாரப் போட்டியில் இலங்கையை பங்கேற்க வைக்க விரும்புகிறது. ஆனால், முதலாளிகளும் தொழிலாளர்களும் 1941 இன் குறைந்தபட்ச ஊதியக் கட்டளைச் சட்டம், 1942 இன் தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம், 1950 இன் தொழிற்தகராறுகள் சட்டம், 1954 இன் கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டம் போன்ற பல தசாப்தங்கள் பழமையான சட்டங்களாலேயே இன்னும் நிர்வகிக்கப்படுகிறார்கள் என்று பரத் அருள்சாமி சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக “தேசிய வேலைவாய்ப்பு உத்தி (national employment strategy) இல்லாத ஒரு தேசிய ஏற்றுமதி உத்தி என்பது வெறும் ஊடக அறிக்கை மட்டுமே. ஆட்சி மாற்றம் என்பது இரண்டு ஆண்டு கால இடைநிறுத்தப் பொத்தானாக (pause button) மாற முடியாது.
என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் பதவியேற்று நீண்ட காலம் ஆகியும் ஒருங்கிணைந்த தொழிலாளர் சீர்திருத்த வரைவையோ அல்லது வெளிப் படையான சட்ட கால அட்டவணையையோ வெளியிட வில்லை. முந்தைய அரசு தயாரித்த வரைவில் தவறுகள் இருந்தால் அதைச் சரிசெய்ய தற்போதைய அரசிற்கு உரிமை உண்டு, ஆனால் சீர்திருத்தப் பணிகளையே புதைத்துவிடக் கூடாது என்பது அவரது கருத்தாகும். அருள்சாமியின் கள ஆய்வின்படி, நாட்டில் தொழிலாளர் தொடர்பான 44 சட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 17 சட்டங்கள் முதன்மையானவை. இந்தத் துண்டாடப்பட்ட சட்ட அமைப்பு முதலாளிகளைக் குழப்புவதுடன், தொழிலாளர்களுக்கான நீதியைத் தாமதப்படுத்தி சட்ட அமுலாக்கத்தையும் பலவீனப் படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.
தோட்டத்துறையில் மனித உரிமை மீறல்கள்
மலையகப் பகுதிகளில் குறிப்பாக தனியார் தோட்டங்களில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே உடனான சந்திப்பிலும் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்ட பரத் அருள்சாமி, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளார். காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் உள்ள 45 தனியார் தோட்டங் கள் மற்றும் சிறுதோட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள், சம்பளம் தடுத்து வைக்கப்படுதல், கடன்பாட்டு அடிமைத்தனம் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் ஆகி யவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் “கட்டாய உழைப்புக்கான” குறிகாட்டிகளைப் பூர்த்தி செய்வதாகக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் கட்டாய உழைப்பினால் தயாரிக் கப்படும் பொருட்களுக்கான சுங்கப் பரிசோதனையை வலுப்படுத்தும் இலங்கை, தனது சொந்த நாட்டின் தோட்டங்க ளில் நிலவும் இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தாமல் புறக்கணிக்க முடியாது என்று பரத் அருள்சாமி வலியுறுத்துகிறார். 1990களில் சுமார் 300,000 ஆக இருந்த தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 100,000 ஆகக் குறைந்துள்ளது.
இதில் தீவிரமாகப் பணியாற்றும் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்கள் 72,000 மட்டுமே என அருள்சாமி மதிப் பிடுகிறார். 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 49.2% ஆக மட்டுமே உள்ள நிலையில், வேலை செய்யும் வயதில் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொருளாதாரச் செயல்பாட்டிற்கு வெளியே இருக்கும்போது குறைந்த வேலையின்மை விகிதத்தைக் கொண்டாடுவது அர்த்தமற்றது.
அதேபோன்று, தோட்டத்துறையில் அறிமுகப்படுத் தப்படும் தன்னிச்சையான “வருவாய் பகிர்வு மாதிரிகள்” (Revenue-sharing models) தொழிலாளர்களின் பாதுகாப்பை சீர்குலைக்கும் “மறைமுக முறைசாரா தொழிலாளர் முறையாக (disguised informalisation)” மாறக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இதன் மூலம் ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதி என்பன பறிபோகும் சூழல் நிலவுவதாக பரத் அருள்சாமி கூறியுள்ளார்.
இதுதவிர, விடுமுறை மற்றும் மகப்பேறு கால பாதுகாப்புகள் இல்லாமற்போதல், கூட்டுப் பேரம் பேசும் உரிமை மற்றும் பணிநீக்க பாதுகாப்புகள் இழக்கப்படுதல், நிறுவனத்தின் அனைத்து வணிக அபாயங்களும் தொழி லாளி மீது சுமத்தப்படுதல் போன்ற பாதக விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். “உற்பத் தித்திறன் சீர்திருத்தம் அவசியம்தான். ஆனால் செயல்திறன் என்ற பெயரில் நிறுவனத்தின் வணிக அபாயங்கள் அனைத்தையும் தொழிலாளி மீது மாற்றுவது நீதியாகாது.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கை 2024 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை மூலம் சுமார் 139 மில்லியன் யூரோ வரி விலக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், இதற் காக திருத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ் 32 சர்வதேச உடன்படிக் கைகள் மற்றும் ILO தரநிலைகளின் அடிப்படையில் இலங்கை மதிப்பீடு செய்யப்படும். “GSP+ என்பது தர்மம் அல்ல. அது சட்ட இணக்கப்பாட்டிற்கான பலனாக கிட்டும் விடயமாகும். சட்ட அமுலாக்கம் பலவீனமாக இருந்தால் வெறும் அங்கீகாரச் சான்றிதழ்கள் சர்வதேச சந்தை அணு கலைப் பாதுகாக்காது”
“அதேபோன்று, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு கூட்டமைப்பில் (RCEP) இணைவது மட்டுமே தானியங்கி பொருளாதாரத் தீர்வாகாது எனக் கூறும் அருள்சாமி, “RCEP என்பது ஒரு நுழைவாயில், அது ஒரு தொழிற்சாலை அல்ல. இலங்கையிடம் போட்டித்தன்மை வாய்ந்த பொருட்கள் இல்லையெனில், நமது உற்பத்தி யாளர்கள் வெளியே நிற்க இறக்குமதிகள் மட்டுமே உள்ளே நுழையும்” என்று குறிப்பிடுகிறார். இந்த அடிப்படையில், பரத் அருள்சாமி சில அவசரக் கோரிக்கைகளையும் அரசிடம் உண்மைத்துள்ளார்.
இதன்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் 30,000 ரூபாயாக உயர்த்தியதும், பணியிட துன்புறுத்தலுக்கு எதிரான ILO மாநாடு 190ஐ அங்கீகரித்ததும் மட்டும் போதுமானவை அல்ல. சில முக்கிய அம்சங்களை உள் ளடக்கிய ஒருங்கிணைந்த வேலைவாய்ப்புச் சட்டம் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த மற்றும் தொலைநிலைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பெயர்த்தகு சமூக பாதுகாப்பு, டிஜிட்டல் ஊதியப் பதிவுகள் மற்றும் நவீன தொழில்சார் பாதுகாப்பு விதிகள், தோட்டப் பகுதிகளில் வலுவான மற்றும் முறையான தொழிலாளர் பரிசோதனைகள், தோட்டத் தொழிலாளர்கள் எளிதாகப் பயன்படுத்தி தீர்வுகளைப் பெறக்கூடிய தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலான புகார் அளிப்பு வழிமுறைகள்.
இணையவழி பாதுகாப்புச் சட்டத்திற்கு மாற்றாக ஒரு முழுமையான இணையப் பாதுகாப்புச் சட்டம் (Cyber Security Act) போன்றன அதில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணைத் தலைவர் பரத் அருள்சாமி சுட்டிக்காட்டியுள்ளார். தேயிலை பறிப்பவர், ஆடை தைப்பவர், இறப்பர் பதப்படுத்துபவர், படகு கட்டுபவர் அல்லது ஏற்றுமதி சேவைகளை குறியீடு செய்பவர் என அனைவரும் இலங்கையின் அந்நியச் செலாவணியையே ஈட்டித் தருகிறார்கள்.
டொலரைச் சம்பாதிக்கும் கையைப் பாதுகாப்பதில் இருந்தே உண் மையான பொருளாதார தேசபக்தி தொடங்குகிறது. என்று பரத் அருள்சாமி சுட்டிக்காட்டுகிறார். இலங்கை 2030 இன் ஏற்றுமதிக்கனவை அடைய வேண்டுமானால், மலையகத் தொழிலாளர்களையும் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தையும் 1940களின் சட்டக் கூண்டிற்குள் பூட்டி வைக்காமல், அவர்க ளின் உரிமைகளை உறுதிசெய்யும் நவீன தொழிலாளர் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.



