பன்னாடுகளைக் கையாளும் சிறிலங்காவின் தந்தி ரோபாயமானது ஒரு பன்னாட்டு உடன்பாட்டால் மிகச் சவாலுக்கு உட்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் எதிர் வரும் வாரங்களில் சிறிலங்காவிற்கு வருகிறார் என்பதும் 2025 ஏப்ரலில் பாதுகாப்புக்கென இவ்விரு நாடுகளிடையேயும் மேற்கொள்ளப்பட்ட “ஒட்டுமொத்த கட்டமைப்பு உடன் பாடு” அல்லது “பல்வேறு ஒத்துழைப்புகளை உள்ளடக் கும் விரிவான புரிந்துணர்வு உடன்பாடு” என்ற வகையில் செய்யப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டை இயங்குநிலைக் குக் கொண்டுவருவதே இவ்வருகையின் முக்கிய நோக்க மென சிறிலங்காவின் செய்தி ஊடகங்கள் (1) வெளிப் படுத்தியிருக்கின்றமையும் சிறிலங்கா எதிர்கொள்ளும் சவா லைக் கட்டியம் கூறுகின்றன.
பூகோளப் போட்டியில் பன்னாடுகளைக் கையாள் வதற்கு சிறிலங்கா பயன்படுத்தும் உத்தியை இங்கு கரு த்திற்கொண்டால் சிறிலங்காவின் மீதான பூகோளப் போட்டிக்கான பங்குதாரர்களை முறையே இந்தியா, சீனா, அமெரிக்க-மேற்குலகும் என மூன்றாக வகுத்து இந்த மூன்று முனைகளின் தேவைகளைத் தனது தேவைகளுடன் சமப் படுத்துவதன் ஊடாக சிறிலங்கா ஒரு சமநிலை உத்தியை பின்பற்றிவருகின்றது.
ஒரு நாடு அல்லது அரசியல் தரப்பு, தன்னைவிட வலிமையான அல்லது போட்டியிடும் பல்வேறு சக்திகளு டன் உறவுகளைப் பேணிக்கொண்டு, எந்த ஒரு சக்தியின் மீதும் முழுமையாகச் சார்ந்துவிடாமல் தனது அரசியல் மற்றும் மூலோபாய சுயாதீனத்தைப் பாதுகாக்கும் அணுகு முறையினையே சமநிலை மூலோபாயம் (Balancing Strategy) எனப் பன்னாட்டு உறவுகள் தொடர்பான கற்கைகள் வரையறுக்கின்றன. (2)
இந்தச் சமநிலை மூலோபாயமே சிறிலங்கா வின் துருப்புச் சீட்டாக இன்றுவரை பயன்பட்டு வருகின்றது. இத்துருப்புச் சீட்டை மிக இலாவகமாகப் பயன்படுத்தி உச்சப்பெறுபேறுகளைச் சிறிலங்காவிற்குக் குவித்ததால்தான் இலக்ஸ்மன் கதிர்காமர் இலக்குவைக்கப்பட் டார் என்பதையும் இங்கு நினைவிற்கொள்வது சாலப் பொருந்தும்.
சிறிலங்காவைப் பொறுத்தவரையில் போட்டி சூழ்ந் திருந்த உலகில் இந்தியாவுடன் பாதுகாப்பு, வலு மற்றும் முதலீடுகள் தொடர்பாகவும் சீனாவுடன் உட்கட்டுமானம், முதலீடு, கடன் கட்டமைப்பு தொடர்பாகவும் மேற்குலகுடன் வணிகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும் சமநிலை மூலோபாயத்தினைப் பயன் படுத்தி அதனை வெற்றிகரமாகக் கையாண்டு வந்தது.
எனினும் தற்போது உலகம் போட்டியிலிந்து போரைநோக்கி நகரும் போக்கில் இந்த சமநிலை மூலோ பாயம் தொடர்ந்து தக்கவைக்க முடியாத மூலோபாயமாக மாறியுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு தக்கவைக்க முடியாதென்பதை கட்டியம்கூறும் உடன்பாடாகவே கடந்த 2025 இந்தியா சிறிலங்காவுடன் மேற்கொண்ட பாதுகாப்பு உடன்பாட்டைக் காணமுடியும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த உடன்பாடானது ஒரு “குடைகீழ் உடன்பாடாகவே – Umbrella Agreement“ வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குடைகீழ் என்பதை “ஒட்டு மொத்த கட்டமைப்பு உடன்பாடு” அல்லது “பல்வேறு ஒத்துழைப்புகளை உள்ளடக்கும் விரிவான புரிந்துணர்வு உடன்பாடு“ எனப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உடன் பாட்டின் உள்ளடக்கங்களைப் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இந்தியாவோ சிறிலங்காவோ உத்தியோபூர்வமாக வெளிப்படுத்தாத நிலையில் எக்னொமிநெக்ஸ்ட் என்ற பன்னாட்டுச் செய்தித்தளமொன்று அவ்வொப்பத்தத்தின் உபவிதிகளுட்படப் பிரதான அகவிதிகளை வெளிப் படுத்தியிருந்தது. (3)
இத்தகவல்கள் வெளியாகியவுடன் சிறிலங்காவின் சனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன்பாட்டின் உள் ளடக்கத்தை நாடாளுமன்றில் வெளிப்படுத்துவோம் என அறிக்கை விட்டிருந்தார். இதுவொரு உடன்பாடு (Memorandum of understading – MOU) என்ற அடிப்படையில் உடன்பாட்டில் ஈடுபட்ட எந்த வொரு தரப்பையும் கட்டுப்படுத்தும் வலுக்கொண்டதல்ல என்பதே வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலாகும். அத்துடன் இந்த உடன்பாட்டிலிருந்து எந்த வொரு தரப்பும் மூன்றுமாத முன்னறிவித்தலுடன் வெளி யேற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமையா னது இரு நாடுகளினதும் இறையாண்மையின் மீது எவ்வித அழுத்தங்களையும் இவ்வுடன்னபாடு பிரயோகிக்கவில்லை என்ற தேற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. என்றாலும் இராசதந்திர உறவுக்கப்பால் மூலோபாய உறவுக்கான உடன் பாடாகவே அவதானிக்கும் போது உட்கிடையான அர்த்தங்கள் மேற்சொன்னவற்றிற்கு எதிராக இருப்பதைக் காணலாம்.
இராசதந்திர உறவென்பது நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை, உறவுகளைப் பேணுதல், சமரசம், அரசி யல் தொடர்புகள் போன்றவற்றைக் குறித்து நிற்க நீண்டகாலப் பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, தேசிய நலன், பிராந்திய ஆதிக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மூலோபாய உறவு கள் குறித்து நிற்கின்றன.
மூலோபாய உறவின் மிக முக்கிய சரத்தொன்றாக இவ்வுடன்பாட்டில் அகவிதி 1 உபவிதி 3 (1.3) இனைக் காணலாம். எந்தவொரு தரப்பும் தனது பிராந்தியத்தை மற்றைய தரப்பின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கூடாது (Neither Party shall allow the use of its territory for activities harmful to the national security of the other) என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வுடன்பாட்டில் எந்தவொரு இடத்திலும் ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான மற்றைய நாட்டின் நடவடிக்கைகள் எவையெனக் அறுதியாகக் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த அகவிதியானது மூலோபாய உறவின் முக்கிய புள்ளியாக மாறுகின்றது.
அதாவது தனது நீண்டகாலப் பாதுகாப்பையும் அதிகாரச் சமநிலையையும் பிராந்திய ஆதிக்கத்தையும் கருத்திற்கொள்ளும் ஒரு தரப்பு மற்றைய தரப்பின் எந்த வொரு நடவடிக்கையையும் இந்த அகவிதியின் கீழ்கொண்டு வருவதற்கான சாத்தியங்களைக் காணலாம்.
இப்போது அதிகாரச் சமநிலை மற்றும் பிராந்திய ஆதிக்கம் என்ற இருவிடயங்களை எடுத்து நோக்கினால் வறிதாகிப்போய் மெதுவாக அத்தாக்கத்திலிருந்து வெளி யேறிவரும் சிறிலங்கா இவ்விரு சொற்றொடர்களையும் தனது அகராதியில் காண்பதற்கே நூற்றாண்டுகளைத் தாண்டவேண்டியுள்ளது. எனில் மற்றைய தரப்பான இந்தி யாவே இந்த உடன்பாட்டினூடாக தனது மூலோபாய வெற்றி யைத் தக்கவைத்துள்ளது என்பது கண்கூடு.
2022 ஒகஸ்ட்டில் சீனாவின் யுவான் வாங்-5 என்ற “விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணை கண்காணிப்பு, மின்னணு/மூலோபாய உளவுத் தகவல் சேகரிப்பு” ஆகிய மூன்று பரிமாணங்களைக் கொண்ட இரட்டை பயன்பாட்டுத் திறன் (dual-use capability) கப்பல் சிறிலங்காவில் நங் கூரமிடுவதனை இந்தியா தனது இராசதந்திர தொடர்புக ளின் மூலம் எதிர்த்திருந்தது. எனினும் அந்த இரசதந்திர முயற்சி தோல்வியடைய அக்கப்பல் சிறிலங்காவில் தரித்து நின்று ஆராய்ச்சிகளை மேற்கொண் டிருந்தது.
இந்த இராசதந்திரத் தோல்வியினை மீண்டும் எதிர்கொள்ளாதிருக்க இந்த பாதுகாப்பு உடன்பாட் டின் ஊடாக இந்தியா மூலோபாய உறவைக் கட்டியெழுப்பியுள் ளது என்று முடிவெடுக்கலாம். எதிர்வரும் காலங்களில் இவ் வாறான கப்பல்களின் வருகையுட்பட இந்தியா எவற்றை யெல்லாம் தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென வரையறுக்கின்றதோ அவற்றையெல்லாம் தடுப்பதற்கு இந்த உடன்பாடு வழிசமைக்கின்றது.
இதனடிப்படையில் இவ்வுடன்பாட்டின் விதி 1.3 எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது தெள்ளத் தெளி வாகின்றது. இத் தெளிவை முன்வைத்து நாடொன்றின் இறையாண்மையை கருத்திற்கொண்டால் இறையாண்மை யின் சுதத்திரத்தன்மையின் மீதான ஊறுபாட்டை விளங்கிக்கொள்ளலாம். இதனை ஆழமாக உற்று நோக்கும் போது சிறிலங்காவின் சமநிலை மூலோபாயம் சார்புநிலை மூலோபாயமாக மாறத்தொடங்கியிருப்பது தெளிவாகும்.
தப்பிக்கொள்வதற்காக உடன்பாட்டிலிருந்து சிறி லங்கா வெளியேறுமாக இருந்தாலும் அதுவும் சிறிலங்கா
வைச் சமநிலை மூலோபாயத்திலிருந்து சார்புநிலை மூலோ பாயத்திற்கே தள்ளும்.



