சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு 2020, ஆகஷ்ட் ,30, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிறது.
இத்தினம் ஐக்கிய நாடுகள் சபை மூலம் 2011 ஆம் ஆண்டு ஆகஷ்ட் 30,திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கும்படியாக அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் அரசியல் காரணங்களினாலும், வன்முறைகள் மற்றும் போர்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் தகவல்களுக்காகக் காத்துத்தவிக்கும் குடும்பத்தினரின் துயரத்தை உலகிற்கு உணர்த்த இது பிரகடனப்படுத்தப்பட்டது.
வலிந்து காணாமல் போதலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசுகளின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த நாள் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
காணாமல் போனவர்களின் நிலையை அம்பலப்படுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி மற்றும் உரிய நிவாரணம் கிடைக்கச் செய்வதை வலியுறுத்தவும் இந்நாள் பயன்படுத்தப்படுகிறது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரங்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் உரிமைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
இங்கையில் 1983 , தொடக்கம் 2010,வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சுமார் 140,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களை மீட்பதற்காக அவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக போராட்டங்களை
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணப்படுவதுடன், ஏனைய மாகாணங்களிலும் சிறியளவில் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டங்கள் வடக்கு கிழக்கில் மட்டுமே கடந்த 2010, தொடக்கம் இன்று வரையும் 17, வருடங்களாக இடம்பெறுகிறது அது சுழற்சி முறையிலான போராட்டமாகவும், உண்ணாவிரத போராட்டமாகவும், கறுப்பு பட்டி போராட்டமாகவும், தீச்சட்டி போராட்டமாகவும் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் வடகிழக்கில் போராட்ட வடிவங்கள் தொடர்ந்த நிலையில் இந்த வருடம் 2026, ஆகஷ்ட்,30, ல் வித்தியாசமான முறையில் வடகிழக்கில் எட்டு மாவட்டங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் மூலமாக ஒரு சர்வதேச மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளது இதன்நோக்கம் உண்மையை கண்டறிதல், பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி என்பவைகளை வலியுறுத்தி சர்வதேச இராஜதந்திரிகளின் கவனத்தையும், சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக கண்காட்சி, மலர் வெளியீடு, மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இதுவரை 600, க்கு மேற்பட்ட பெற்றோர்கள் இயற்கை எய்தியுள்ளனர் அவர்களின் விபரங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பாவித்த உடை, பொருட்கள் காட்சிப்படுத்தல் என்பன இந்த மாநாட்டில் கண்காட்சியாக வைக்கப்பட்டு சர்வதேச கவனத்தை திரும்பும் விதமாகவும் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவற்கோ, நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகள் இல்லை, சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலியுறுத்துவதே முக்கிய நோக்கம்.
இந்த மாநாட்டில் சிலவெளிநாட்டு தூதுவர்கள், தென்பகுதியில் உள்ள மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதுடன் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் சமூக ஊடக தொழில் நுட்பம் ஊடாக இந்த மகாநாட்டை அவதானிக்கவும் கருத்துக்களை பகிரவும் ஏற்பாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காணாமல்போனோருக்கான அலுவலகம் என்பது சிறப்பான செயற்பாட்டுக்குரியதாக இல்லை அது ஒரு வெற்றுப்பானையாகவே இருக்கிறது. எப்படியிருந்தாலும் கணவனை இழந்த ஒரு பெண், குடும்பத்தைத் தலைமை தாங்குவதும், மகனை இழந்த, சகோதரத்தை இழந்தவர்கள் சிரமப்படுவதும் சாதாரணமானதல்ல எத்தனை வழிமுறைகளைக் கையாண்டும், தமக்கான நீதி சரியான முறையில் கிடைக்குமா என்ற கேள்வி இவ்வாறானவர்கள் மத்தியில் உள்ளது. இந்த இடத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான குற்றமாகும். இது ஒரு போர்க்குற்றமேயாகும். ஐ.நாவின் தீர்மானம் 30: 1 இன் உறுப்புரை 6 ஆனது, மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்களுக்கு எதிராக வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட நீதிமன்றத்தை உள்நாட்டில் அமைக்க வேண்டும் எனக் கூறுகிறது. அதனடிப்படையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மைகளைக் கண்டறியவும் இக்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் சுயாதீனமான விசேட நீதிமன்றம் அமைத்தலையும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இலங்கை அரசாங்கமானது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்த கரிசனையும் இதுவரை காட்டவில்லை.
போரின் இறுதியில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டோர் நிலை, போர் முடிவடையும் போது, யுத்த பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த, குறிப்பிட்ட எண்ணிக்கையான குடும்பத்தினர் தமது உறவுகளைப் மேலதிக விசாரணைக்காக இராணுவத்திடம் கையளித்தனர். இவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள் திரும்பி வரவில்லை.
‘தெரியாது’ என்பதே கடந்த அரசாங்கத்தின் பதிலாக இருந்தது.
2015, தொடக்கம்,2020, வரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சி தலைவர் பதவியுடன் இணக்க அரசியல் செய்த நல்லாட்சி அரசாங்கமும் இது பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை.
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரில் கூடுதலானவர்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களைச் சார்ந்த ஆண்களாவர். இவ்வாறான குடும்பங்கள் இவர்களின் உழைப்பிலேயே வாழ்ந்துள்ளனர். குடும்பத்தின் பாதுகாப்பாளரை இழந்துள்ளதால் இந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு, குடும்பத்தை கொண்டு நடத்தும் வகையில் மாதாந்த ஊதியத்தை யார் வழங்குவார்கள் என்ற கேள்வியும் கண்ணீருடனே அவர்களில் வாழ்க்கை நகருகிறது.
காணாமல் ஆக்கப்படுதலுடன் தொடர்புடைய படைத்தரப்பினர், பொலிஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தல், அதிகாரங்களைக் குறைத்தல், கொடுப்பனவுகளை ரத்துசெய்தல் ஆகியன மூலம் காணாமலாக்கப்பட்டோருக்கான சட்டமூலம் மற்றும் அதன் நடவடிக்கைகளைக்கூட எந்த ஒரு இலங்கை அரசும் செய்யவில்லை.
வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவந்து, சிவில் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புதல் என்பது முன்வைக்கப்படுகிறது.
நிலை மாறுகால நீதிச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக காணாமல்போனோரின் விடயம் இருக்கின்ற நிலையில், காணாமல் ஆக்கப்படுவதற்கு மூலகாரணம் யார் என்பது சர்வதேச நீதிமூலமே வெளிப்படுத்தவேண்டும் அதற்கானசர்ஙதேச நீதி கிடைக்கும் பட்சத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான இழப்பீடுகள் வழங்குதல் என்பதுவே முக்கியமானதாகும்.
தற்போது வடகிழக்கில் எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் பலம் பொருந்திய ஒரு அமைப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்புக்களிலும் சில முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் உள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதனை சில தீயசக்திகள் வலிந்து கண்மலர் ஆக்கப்பட்டோர் உறவுகளுடைய சங்கத்தையும் இரண்டு அணி, மூன்று அணியாக உடைக்கவும் முயல்கின்றமை தெரிகிறது. கருத்து வேறுபாடுகள் உள்ளக முரண்பாடுகள் ஏற்கபடுவது தவிர்க்க முடியாதது அவைகளை சம்மந்தப்பட்ட தரப்புகள் பேசி விட்டுக்கொடுப்புகள் செய்து அனைவரையும் ஒன்றாக ஒற்றுமையாக பயணிப்பதுதான் ஆரோக்கியமாகும். இல்லை எனில் எதிரிகளும் துரோகிகளும் இந்த சங்கத்தையும் பிரிப்பதால் வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான்சர்வதேச நீதி எட்டாக்கனியாகிவிடும்.



