யாழில் “நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய செயற்றிட்டத்தின் மாவட்ட நடைபவனி!

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய செயற்றிட்டத்தின் மாவட்ட நடைபவனி செவ்வாய்க்கிழமை (28)  யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலிருந்தும், ஆளுநர் செயலகத்திலிருந்தும் சமநேரத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந் நடைபவனியில் மாவட்டச் செயலகத்திலிருந்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தினர், பொலிஸ் மற்றும் முப்படையினரும், அதேவேளை  ஆளுநர் செயலகத்திலிருந்து ஆளுநர் செயலகம், பிரதம செயலாளர் செயலகம், மாகாண அமைச்சு மற்றும் மாகாண திணைக்கள உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.

இந்த நடைபவனியில் வட மாகாண ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகன், பிரதம செயலாளர் தனுஜா முருகேசு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன், பிரதிப் பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.