இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சட்ட உருவாக்கங்களில் நம்பகமான மக்கள்தொகை தரவுகள் மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்துவதை வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் மற்றும் பாாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் மாறிவரும் மக்கள்தொகை நிலைமைகள் எதிர்கால சட்டங்கள் மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளில் பிரதிபலிப்பதை உறுதி செய்வதற்கான கூட்டாண்மை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி அனுஷா ரோஹனதீரா மற்றும் இலங்கைக்கான ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் பதில் பிரதிநிதி புன்ட்சோ வாங்யெல் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இந்த கூட்டாண்மை மூலம், இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் நம்பகமான மக்கள்தொகை தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவதற்கு ஆதரவு வழங்கப்படும்.



