ஈழத்தமிழினத்தின் சுதந்திரத்தை மீளவும் உறுதிசெய்து சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான விடுதலை அரசியல் செயல்பாடுகள் 1948, பெப்ரவரி,04, ல் பிரித்தானியர் கள் தமிழர்களுடைய உரிமையை பறித்து இலங்கை இனவாதிகளிடம் கையளிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரையும் 78, ஆண்டுகளாக. அறவழியில் அகிம்சை வழிப்போராட்டம், ஆயுதவழிப்போராட்டம், இராஜதந்திர வழிப்போராட்டம் எல்லாம் நடத்தப்பட்டன, நடந்துகொண்டும் உள்ளன.
இந்த செயல்பாடுகளில் வருடத்தில் உள்ள ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 12, மாதங்களும் ஈழத்தமிழர்களின் தியாகம்,சோகம்,துரோகம், வீரம், இழப்பு, சாதனை, வேதனை என்ற பட்டியல்கள் எல்லா மாதங்களிலும் உண்டு. அதில் யூலை மாதம் ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத பல முக்கியமான சம்பவங்கள் நடந்த மாதமாகும்.
1957 ,யூலை,26 அன்று பண்டாரநாயக்க செல்வநாய கம் ஒப்பந்தம், அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் இலங்கை வரலாற்றில் தமிழ் தலைவர் ஒருவர் சிங்களத்தலைவருடன் எழுத்து மூலமாக செய்த முதலாவது ஒப்பந்தம் யூலை மாதமாகும்.
1960, யூலை, 20, ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்தான் இலங்கை தமிழ் அரசுக்கட்சி 16 தொகுதிக ளில் 16 அதிகப்படியான பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் முதலாக பெற்றது.
1975 யூலை 27 ல் விடுதலைப்புலிகளின் தலைவரால் முதன் முதலாக துரோகிகள் அழிப்பு என்ற வேட்டு யாழ் மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா இலக்கு வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
1977 யூலை 21 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்தான் 1976 மே 14 ல் தந்தை செல்வா நிறைவேற்றிய வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு ஆணை கிடைத்தது. அதில் வடகிழக்கில் 18, தொகுதிகளில் இருந்து 18, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியதுடன் தமிழர் விடுதலை கூட்டணிக்கு எதிர்கட்சி பதவியும் கிடைத்தது. 1978 யூலை 20 ல் விடுதலைப்புலிகளின் பெயரை குறிப்பிட்டு இலங்கை பாராளுமன்றத்தில் “புலிகள் தடைச்சட்டம்” நிறைவேற்றப்பட்டது.
1979 யூலை 19 ல் பயங்கரவாத தடைச்சட்டம் அன்று மதிய போசன இடைவெளியின் பின்னர் பி.ப.01, மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும், நீதி அமைச்சராகவும் இருந்த கே.டபிள்யூ தேவநாயகம் அவர்களால் அந்த சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு அதே இரவு 10.45, மணி வரை விவாதம் இடம்பெற்று இரவோடு இரவாக பயங்கரவாதச்சட்டம் நிறை வேற்றப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான மைத்ரிபால சேனாநாயக்க, அனுர பண்டாரநாயக்க உள்ளிட்ட அக்கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இச்சட்டமூலத்திற்கு தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மதவாச்சி தொகுதி ஶ்ரீலங்கா சுதத்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சேனநாயக்கா இந்த சட்டத்தை எதிர்த்து உரையாற்றினார். இச்சட்டம் நாட்டில் ஒரு ‘இராணுவ ராஜ்யத்தை’ (Military State) உருவாக்கும் என்று கடுமையாக எச்சரித்ததுடன் “பிடிவாரண்ட்” இன்றி வீடுகளுக்குள் நுழைதல், தனிப்பட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்தல், அச்சு ஊடகங்களுக்குத் தணிக்கை விதித்தல் மற்றும் காலவரையற்ற தடுத்து வைப்பு போன்ற ஜனநாயக விரோத மற்றும் ஆபத்தான விதிகள் இச்சட்டத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி தனது ஆழ்ந்த எதிர்ப்பைப் பதிவு செய்து உடனே இந்த சட்டம் நீக்கவேண்டும் இது கொடிய சட்டம் என பேசியதுடன் எதிர்த்தும் வாக்களித்தார்.
அவர் அன்று கூறிய இராணுவ ராஜ்யம் இன்றுவரை தொடர்கிறது என்பதுதான் உண்மை.
ஆனால் பிரதான எதிர்கட்சியாக இருந்த தமிழர் விடுதலை கூட்டணி எதிர்கட்சி தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கம் சட்டம் தொடர்பாக எதிர்த்து பேசிவிட்டு வாக்கெடுப்பு நேரம் 18, பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தனர் என்ற வரலாற்றுத்துரோகம் தமிழர் விடுதலை கூட்டணிக்கு உண்டு. தமிழர் விடுதலை கூட்டணி விட்ட முதலாவது துரோகமாக இது அப்போது விமர்சிக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டம் 1979 ஆம் ஆண்டு 48, ம் இலக்க சட்டம், இலங்கையில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாக கொண்டுவரப்பட்டது. அப்போது மூன்று மாதங்களுக்கு மட்டுமே இந்த சட்டம் என கூறப்பட்டது. ஆனால் 1982 இல் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டத்தின் (1982 இன் 10 ஆம் இலக்க திருத்தச் சட்டம்) மூலம் முழுமையாகத் திருத்தப் பட்டு ஒரு நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டது. நிரந்தர சட்டமாக்கப்பட்டு இன்றுவரை அமுலில் இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய கட்சிகள், மனிதநேய அமைப்புகள் உட்பட சர்வதேசமும் இந்த சட்டத்தை எதிர்க் கின்ற போதும் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் நீக்கப் படவில்லை 47, வருடங்களாக இந்த கொடிய சட்டம் இன்று வரை உள்ளது.
இந்த சட்டமானது அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு எதிராக மட்டுமே தெற்கின் சிங்கள, பெளத்த அரசியல்வாதிகள் பயன்படுத்திய நிலையில் தற்போது அந்த சட்டத்தின் கீழேயே பலரும் கைது செய்யப்படும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
இந்த சட்டம் ஜக்கிய தேசிய கட்சியில் இலங்கை பிரதமராக இருந்த ஜே ஆர் ஜெயவர்தனா அரசில் நீதி அமைச்சராக இருந்த மட்டக்களப்பு மாவட்ட கல்குடாத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே.டபிள்யூ தேவநாயகத்தை கொண்டு 1979 யூலை 19 ல் நிறைவேற்றினார், பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றிய கே. டபிள்யூ. தேவநாயகத்தின் நீதி அமைச்சர் பதவி சரியாக 07, மாதத்தில் 1980,பெப்ரவரி,19, ல் பறிக்கப்பட்டு அவருக்கு உள்ளூராட்சி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது ஜே ஆர் ஜெயவர்தனவின் தந்திரம் பயங்கர வாத்தடைச்சட்டம் நிறைவேற்றுவதற்காக மட்டுமே ஒரு தமிழன் தேவைப்பட்டது அதுவும் வடகிழக்கு தமிழனாக அமைச்சராக மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதி தேவநாயகத்துக்கு நீதி அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது என்பதே உண்மை. இது அப்போது தற்காலிக சட்டமாக கூறப்பட்டாலும் பின்னர் 1981 ல் நிரந்தர சட்டமாக்கப்பட்டது.
தமிழரை கொண்டு தமிழரை அழிப்பதற்காகவே ஜே ஆர் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். ஆனால் 2019, க்கு பின்னர் தற்போது தென்பகுதி சிங்கள மக்கள், சிங்கள அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் இந்த சட்டம் பிரயோகிக் கும் போதுதான் இந்த சட்டத்தின் கொடுமையை அவர்கள் விளங்கிக்கொண்டனர்.
2012ல் இருந்து 2026 தற்போது வரை உள்ளாட்டு மனித உரிமை அமைப்புகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எல்லாம் இந்த சட்டத்தை நீக்குமாறு தொடர் அழுத்தம் கொடுத்தும் இதுவரை ஜனாதிபதிகளாக இருந்த மகிந்தராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க எவருமே வாயால் நீக்குவ தாக கூறியும் செயலில் இதுவரை இல்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்தை தமிழர் ஒரு வரே தயாரித்ததாக கருத்தும் உள்ளது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தவரும் தமிழர்தான் என கூறப்பட்டபோதும் அதனை சிலர் மறுப்பதும் உண்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கும் போது அதனை எதிர்த்து வாக்களிக்காமல் விலகி இருந்த எதிர்கட்சி தலைவரும் தமிழர்தான், அந்த சட்டத்தால் அதி கூடியவர்களாக பாதிக்கப்பட்டதும் தமிழர்கள்தான் என்ற வர லாற்று உண்மைகளும் உண்டு.
1983 யூலை 23 ல் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடத்திய இராணுவ வாகனம் மீதான தாக்குதல். இதில் 13, இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த சடலங்களை கொழும்பு கனத்தை மயானத்திற்கு கொண்டு சென்று கொழும்பில் இனப்படுகொலைக்கு தூபம் இட்டார் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்தன. ஜே ஆர் தலைமையிலான ஐக்கியதேசிய கட்சி அரசால் திட்டமிட்டு தமிழினப்படுகொலை ஏற்படுத் தப்பட்டது. “கறுப்பு யூலை” என்று அழைக்கப்படும் 1983 யூலை 23 தொடக்கம் 1983 யூலை 30 வரை 07 நாட்களாக கொழும்பு உட்பட தென்பகுதியில் சிங்கள இராணுவமும், சிங்களக்குண்டர்களும் இணைந்து நடத்திய தமிழினப்படு கொலைகளாகும். இதில் ஏறக்குறைய மூவாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஏறத்தாழ 8,000 தமிழர்கள் வீடுகளும், 5,000 தமிழர்களின் வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு 300 மில்லியன் என அப்போது மதிப்பிடப்பட்டது. பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரசசார்பற்ற அமைப்பு 1983 டிசம்பரில் வெளியிட்ட அறிக் கையில் இது ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது. சர்வதேச நிறுவனம் இனப்படுகொலை என முதன் முதலாக வெளியிட்ட அறிக்கையாக இதனை கொள்ளலாம்.
1983 யூலை 25 மற்றும் யூலை 27 ஆகிய இரு தினங்களில் முக்கிய இனப்படுகொலைகளாக வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளான தங்கத் துரை, குட்டிமணி, ஜெகன் உட்பட 53, தமிழ் கைதிகள் இனப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த மாதம் 2026, யூலை,23, கறுப்புயூலைக்கு 43, ஆண்டுகள் நினைவாகும்.
1985,யூலை,22,23, இரு தினங்கள் பூட்டான் தலை நகரில் இலங்கை அரசு தமிழர் தரப்பு தமிழர் விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலைப்புலிகள், ரெலோ, புளட், ஈபிஆர்எல்எவ், ஈரோஸ் ,ஆகிய இயக்கங்கள் ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
1987, யூலை,05, ம் திகதி விடுதலைப்புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதல் யாழ்ப்பாணம் நெல்லியடி இராணுவமுகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். தாக்குதல் நடத்தியவர் யாழ்ப்பாணம், துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ் ஹாட்லிக் கல்லூரியில் கல்விகற்ற வசந்தன் என்ற இயற்பெயரைக்கொண்ட மில்லர் எனப்படும் கரும்புலி மாவீரர். 2026, யூலை,05, இன்று 39, வது ஆண்டு நினைவாகும்.
மில்லர் உயிர் நீத்த தினமே கரும்புலி நாளாக விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டது.
1987, யூலை,05, க்கு பின்னர் 2009, மே,18, வரை நூற்றுக்கணக்கான கரும்புலிகள் வீரச்சாவை தழுவினர் என்பது வரலாறு. 1989 ,யூலை ,13,ல் எதிர்கட்சிதலைவராகவும் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவராகவும் இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், மற்றும் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இருவரும் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1987 யூலை 29 இலங்கை இந்திய உடன்படிக்கை – இந்தியபிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர். 1987 யூலை 30 இந்தியப்படை ஈழமண்ணில் வருகை (முற்றுகை)2001 யூலை 24 ல் கட்டுநாயக்கா விமானத்தளம் மீதான கரும்புலித்தாக்குதல் இடம்பெற்றதும் இந்த யூலை மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 12,மறக்கமுடியாத விடயங்கள் ஈழத் தேச விடுதலை அரசியலில் இந்த யூலை மாதமே அரங் கேறியுள்ளது என்பது வரலாறாகும்.



