ரிம்பேக் ஒருங்கிணைந்த கூட்டுப் கடற்படைப் பயிற்சிப் பின்னணியில், சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதில் இலங்கையின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்க கடற்படையின் 3வது துணைத் தளபதி ரியர் அட்மிரல் ரியர் அட்மிரல் சூசன் எம். பெய்லி தெரிவித்தார்.
இன்று (06) திங்கட்கிழமை காலை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாடுகளின் அளவு அல்லது பலம் எதுவாக இருந்தாலும், அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமான மற்றும் திறந்த பிராந்தியத்திற்கான ஒரு பொதுவான பார்வையை ரிம்பேக் ஒருங்கிணைந்த கூட்டுப் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் நாடுகள் முன்னெடுத்துச் செல்கின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



