உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலவும் நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கவனம் செலுத்தி, அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கக் கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று (12) பாராளுமன்றத்தில் வைத்து இக்கடிதம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையின் தலைவர் என்ற ரீதியில், இக்கருத்துகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று, நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாக்குமாறு கோரியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இக்கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளனர்.
.jpg)



