ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் தூய்யகொந்தா மொஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் வஸிலி ஒஸ்மாகோவ்வை சந்தித்தார்.

26 – 29ஆம் திகதி வரை மொஸ்கோவில் நடைபெறும் முதலாவது சர்வதேச பாதுகாப்பு மாநாடு மற்றும் பாதுகாப்பு விடயங்களுக்கான உயர்மட்ட பிரதிநிதிகளின் வருடாந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்றிருந்ததன் ஓரங்கமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

கலந்துரையாடலின் போது, பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்கள் குறித்து இருதரப்பும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், குறிப்பாக இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பயிற்சி பரிமாற்ற வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துள்ளார்.