யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மக்களின் காணி மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்த காணிகளை விடுவிக்கும் முகமாக உயர்மட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு காணி விடுவிப்பு தொடர்பில் கள ஆய்வுகளையும் மேற்கொண்டாம். இதில் உடனடியாக விடுவிக்கப்பட கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக வழிப்பாட்டு இடங்கள், பாடசாலைகள் என்பவற்றை விடுவிக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம்.
அதேவேளை , உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பிரதான வீதிகளின் சில பகுதிகள் காணப்பட்டுகின்றன. அவற்றினை விடுவித்து, முழுமையாக வீதியை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


