மாகாண சபைத் தேர்தலுக்காக பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கு வேட்புமனு தாக்கலின்போது 25% ஒதுக்கீட்டை வழங்க எழுத்துமூலமாக இணக்கம் தெரிவித்துள்ளோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு சாதகமான வகையில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை அரசாங்கம் நிறைவேற்றலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



