இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18 ஆம் திகதியை இனப் படுகொலை தினமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் ஆட்சியின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (13) நடத்தப்பட்டது.
இதன்போது தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்த விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னியரசு தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கை முன்வைத்தனர்.
தங்களது தரப்பில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினாலும் சில முக்கியத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்
தமிழக அரசு ஜோதிடம், பில்லி சூனியம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது, அதேபோல மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும், அறிவியலுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும் வன்னியரசு பேரவையில் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18ஆம் திகதி இனப் படுகொலை தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு ன வேண்டுகோள் விடுத்தார்.



