ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு வந்த விஜயை, உதயநிதி ஸ்டாலின் வரவேற்று ஆரத்தழுவினார். திமுக – அதிமுக என சுமார் அறுபது ஆண்டுகளாக மாறி மாறி நீடித்த தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்கத்தை உடைத்து ஆட்சிக்கு வந்துள்ளார் விஜய்.
விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிலையில், இன்று சட்டப்பேரவையில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தவெகவின் ஜேசிடி பிரபாகர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரவிசங்கர் ஆகியோரின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் விஜய் கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்துக்கு விஜய் சென்றுள்ளார்.




