அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை – புதிய நிபந்தனைகளை விதித்த ஈரான்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய நிபந்தனைகளை பாகிஸ்தானிடம் ஈரான் வழங்கியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.

ஐஆர்என்ஏ (IRNA) செய்தி முகமையின்படி, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானிடம் இந்த நிபந்தனைகள் வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 30) வழங்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை மாலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகாயி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரானின் முன்னுரிமை போரை நிறுத்துவதும், நிலையான அமைதியை அடைவதுமே என்று வலியுறுத்தினார்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ மத்தியஸ்தராக இருப்பதாக பாகாயி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

பல நாடுகள் மத்தியஸ்தராகச் செயல்படத் தயாராக இருந்தாலும், பாகிஸ்தான் மட்டுமே அதிகாரப்பூர்வமான மத்தியஸ்தர் என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.