அமெரிக்காவின் ஏகாதிபத்தியத் தேவைகளுக்காக உலக நாடுகளின் இறையாண்மை சிதைக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மேற்கொண்டுள்ள இரகசிய இராணுவ ஒப்பந்தங்களை நாட்டு மக்களுக்கு மறைத்து, அந்நாடுகளுக்கு அடிபணிந்து செயற்படுகின்றது என மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (5) முன்னெடுக்கப்பட்ட கண்டனப் போராட்டத்தின் போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.



