மின்சார கட்டண உயர்வு தொடர்பான புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு , 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சார கட்டண உயர்வுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த புதிய திருத்தத்தின் கீழ், மின்சார பயன்பாட்டு அலகுகளின் அடிப்படையில் கட்டண உயர்வு 10 வீதமாக அதிகரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி,
* 0 முதல் 30 அலகுகளுக்கு கீழ் பயன்பாட்டுக்கு 4.3% அதிகரிப்பு,
* 31 முதல் 60 அலகுகள் வரை 6.9% அதிகரிப்பு,
* 61 முதல் 90 அலகுகள் வரை 6.9% அதிகரிப்பு,
* 91 முதல் 180 அலகுகள் வரை 7.2% அதிகரிப்பு,
* 180 அலகுகளுக்கு மேற்பட்ட பயன்பாட்டுக்கு 25.3 % அதிகரிப்பு நடைமுறைக்கு வரும்.
மேலும், இந்த சதவீத உயர்வுகளுக்கு இணையாக கட்டண தொகையிலும் உயர்வு இடம்பெறுகிறது. அதன்படி,
* 30 அலகுகளுக்கு 15 ரூபா,
* 31 முதல் 60 அலகுகளுக்கு 45 ரூபா,
* 61 முதல் 90 அலகுகளுக்கு 120 ரூபா,
* 91 முதல் 120 அலகுகளுக்கு 240 ரூபா
*121 முதல் 150 அலகுகளுக்கு 330 ரூபா
*151 முதல் 180 அலகுகளுக்கு 420 ரூபா
*181 முதல் 210 அலகுகளுக்கு 1,140 ரூபா
*211 முதல் 240 அலகுகளுக்கு1,860 ரூபா
*241 முதல் 270 அலகுகளுக்கு 2, 580 ரூபா
*271 முதல் 300 அலகுகளுக்கு 3, 300 ரூபா வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு, நாட்டின் மின்சார உற்பத்தி செலவுகள், எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான முழுமையான விபரங்களை பார்வையிட
https://cdn.virakesari.lk/uploads/medium/file/321663/Annex_2_-_Tariff_Table__1_.pdf



