கையிருப்பிலுள்ள எரிபொருளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் எரிபொருள் தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைக்கும் மாஃபியாக்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன்படி QR குறியீடு இன்றி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பிலும் பொதுமக்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, ஒவ்வொரு வாகன வகைக்கும் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு தொடர்பிலும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் நேற்று (15) அதிகாலை முதல் மீண்டும் QR முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களிலும் வரிசையில் நீண்ட நேரம் மக்கள் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது.



