ஈரானுக்கு எதிரான ஐ.நாவில் இந்தியா தீர்மானம்!

அரபு நாடுகள் மீதான ஈரானின் சமீபத்திய தாக்குதல்களைக் கண்டிக்கும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா தலைமையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா பாதுகாப்பு சபையில் (UNSC) இந்தியா கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்மானம் 13-0  வாக்குகளால் நிறைவேறியுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே வாக்களிக்க வில்லை. பஹ்ரைன் தலைமையிலான இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், கனடா, ஜெர்மனி மற்றும் பாகிஸ்தான், எகிப்து போன்ற பல முஸ்லிம் நாடுகள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உறுப்பினர்கள் உட்பட 135 நாடுகள் ஆதரவளித்தன.
ஈரான் இஸ்லாமியக் குடியரசு விமான நிலையங்கள், எரிசக்தி நிறுவனங்கள், மற்றும் முக்கியமான சிவில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட நிலைகளை வேண்டுமென்றே குறிவைப்பதையும், ஹோர்முஸ் (Hormuz) நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களையும் இந்தத் தீர்மானம் கண்டித்துள்ளது.
“வணிகக் கப்பல் போக்குவரத்தில் இரண்டு இந்திய மாலுமிகளை இழந்துள்ளோம், ஒருவரைக் காணவில்லை,” என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்களன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவுக்குச் சென்ற தாய் லாந்து நாட்டின் மயூரி நரீ என்ற கப்பல் தாக்கப்பட்டதாக அந்நாட்டு கடற்படை புதன்கிழமை(11) தெரிவித்துள்ளது. அந்தக் கப்பலில் இருந்து 20 மாலுமிகளைக் காப்பாற்றியுள் ளது ஓமன் கடற்படை.
“இந்த மோதலின் ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற பல தாக்குதல்களில் இந்திய குடிமக்கள் உட்பட விலை மதிப்பற்ற உயிர்கள் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளன என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
160க்கும் மேற்பட்ட சிறுமிகளைக் கொன்ற பள்ளி யின் மீதான தாக்குதலுக்கோ அல்லது உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் படுகொலைக்கோ புது தில்லி இதுவரை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டிக்க வில்லை. போர் தொடங்கியதிலிருந்து ஜெய்சங்கர் தனது ஈரானிய சகா அப்பாஸ் அரக்சியுடன் மூன்று முறை உரையாடியுள்ளார்.