இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டில் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவற்றில் டீசல் 33 நாட்களுக்குத் தேவையானது, பெட்ரோல் 27 நாட்களுக்கானது,
விமான எரிபொருள் 49 நாட்கள், மசகு எண்ணெய் 44 நாட்களுக்கானது எனும் அடிப்படையில் எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும் கூறினார்.
மேலும் இவ் விபரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளவோ எரிபொருள் வரிசையினை ஏற்படுத்தவோ தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.



