ஈரானின் ஆட்சியை நிறுத்துவதற்கான “கடைசி, சிறந்த வாய்ப்பு” என்பதால் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்க முடிவு செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
ஈரானை தாக்கிய பின்னர் முதல் முறையாக வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப் , அமெரிக்க இராணுவம் “பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை” தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
ஈரான் அமெரிக்காவின் முன் எச்சரிக்கைகளை புறக்கணித்ததாகவும், “அணு ஆயுத உருவாக்கத்தை நிறுத்த மறுத்ததாகவும்” ட்ரம்ப் கூறினார்.
ஈரானில் இந்த நடவடிக்கையின் நோக்கங்கள் “தெளிவானவை” என்று கூறிய ட்ரம்ப் “ஈரானின் ஏவுகணை திறன்களை அழிப்பது”, “அவர்களின் கடற்படையை அழிப்பது” மற்றும் ”அவர்கள் அணு ஆயுதம் வைத்திருப்பதைத் தடுப்பது உள்ளிட்டவை” என்றும் கூறினார்.
ஆரம்ப கணிப்பில் நான்கு முதல் ஐந்து வாரங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்ட இந்த போர்,’ குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் உள்ளது’ என்றும், தேவையெனில் இன்னும் நீண்ட காலம் தொடரும் திறன் அமெரிக்காவிற்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.



