கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்படவேண்டும் – ரவூப் ஹக்கீம்

இதுவரையில் நாடளாவிய ரீதியில் பல ஊடவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்படவேண்டும். அதனூடாகவே பல உண்மைகளை வெளிக்கொணரமுடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு   ஞாயிற்றுக்கிழமை  கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.