ஈரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் ‘ஆழ்ந்த இரங்கலை’ தெரிவித்துள்ளார்.
இரானிய மக்களுடன் துணைநிற்பதாக தெரிவித்துள்ள அவர், மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமையை ‘தீவிரமானது மற்றும் கவலைக்குரியது’ என்று விவரித்தார். இது “சர்வதேச சட்டத்தை மீறிய செயல்” கூறிய அவர், நாட்டுத் தலைவர்களை நேரடியாக குறிவைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்கள் உலகம் முழுவதும் உறுதியற்ற தன்மை, பதற்றம் மற்றும் பெரும் மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும் என்று அவர் கூறினார்.
“இந்த கடினமான நேரத்தில் நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் இரான் மக்களுடன் துணை நிற்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.



