‘டித்வா’ புயல் பாதிப்பு: பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்: விண்ணப்பங்கள் கோரல்!

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில், ஒருமுறை மட்டும் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயற்படுத்த லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபை தீர்மானித்துள்ளது.

இந்த விசேட புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தகுதியுள்ள மாணவர்கள் இதற்கான விண்ணப்பப்படிவங்களை www.mahapola.lk என்ற மஹாபொல அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.