போர்த்துகல் வெளிவிவகார அமைச்ச-அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு

போர்த்துகல் வெளிவிவகார அமைச்சர் பாலோ ரஞ்சேல் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை கடந்த 24ஆம் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாசார மரபுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய வேண்டிய தருணம் இதுவென போர்த்துகல் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தூதரக விவகாரங்கள், கலாசாரப் பரிமாற்றங்கள் மற்றும் சமகால உலகளாவிய பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான விடயங்கள் குறித்து இரு அமைச்சர்களும் இதன்போது கலந்துரையாடினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளுக்கு அப்பால், வழக்கமான ஆலோசனைகள் மூலம் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இந்த விஜயம் அமையும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்