தமிழகத்தில் வசிக்கும், இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனைப் பேணுவதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமது, எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைத் தமிழர்களுக்காக, தமிழக அரசின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய, நிரந்தரக் குடியிருப்புகளை தமிழக அரசு தொடர்ந்தும் வழங்கி வருகிறது.
குடியிருப்புகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் வழங்குவதற்கு தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், இலங்கைத் தமிழர்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டதலின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



