ரில்வின் சில்வாவின் விஜயம் குறித்து இந்தியா விளக்கமளிக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இந்தியாவுடன் எந்தவித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை என்று, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளமை தொடர்பில் இந்திய தரப்பே உறுதி செய்ய வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரில்வின் சில்வாவின் அண்மைய இந்திய விஜயம் தொடர்பில் அவர் இதன்போது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அத்துடன், மாகாண சபைத் தேர்தல் என்பது, தமிழ் மக்களுக்கே மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்றும், சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.