அரசாங்கத்துக்கு எதிராக பௌத்தப்பிக்குகள் ஒன்றிணைவு

Unknown 1 4 அரசாங்கத்துக்கு எதிராக பௌத்தப்பிக்குகள் ஒன்றிணைவு

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியும், மன்னாரில் பிரதமரும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர்கள் மீளப்பெற வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார் என்றும் பேராசிரியர் கோட்டப்பிட்டிய ராஹுல தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்திற்கும் பிக்குகளுக்கும் எதிராக எழுந்துள்ள சவால்களை முறியடிக்கும் நோக்கில் நேற்று (20) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மகா சங்க மாநாட்டில்’ உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

Unknown 9 அரசாங்கத்துக்கு எதிராக பௌத்தப்பிக்குகள் ஒன்றிணைவு

தற்போதைய அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய 10 அம்சங்களைக் கொண்ட ‘சங்கப் பிரகடனம்’ இந்த மாநாட்டின் போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த மாநாட்டில் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான பிக்குகளின் கட்டளைகள் அடங்கிய ‘சன்னஸ் பத்திரம்’ மேடையில் வைக்கப்பட்டு மாநாட்டின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பௌத்த சாசனம், மகா சங்கத்தினர் மற்றும் பௌத்த கலாச்சாரம் ஆகியவற்றுக்குத் தற்காலத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களைத் தோற்கடிப்பதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான பிக்குகள் இதில் பங்கேற்றனர்.