ஈரானுடன் அமெரிக்கா ஓர் ஒப்பந்தத்தை எட்டுமா அல்லது இராணுவ நடவடிக்கை எடுக்குமா என்பதை “அடுத்த, அநேகமாக, 10 நாட்களில்” உலகம் கண்டுபிடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வொஷிங்டன் டி.சி.யில் அமைதி வாரியத்தின் தொடக்கக் கூட்டத்தில் பேசுகையில், ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் குறித்து ட்ரம்ப் கூறினார்: “நாம் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் மோசமான விஷயங்கள் நடக்கும்.” என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்திய நாட்களில், அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு இராணுவப் படைகளை அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தில் அமெரிக்க மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் மற்றும் சில குடியரசுக் கட்சியினர் அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ஈரானில் எந்தவொரு சாத்தியமான இராணுவ நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.



