ரணில் விக்ரமசிங்க விலகினால் அவருடன் பல உறுப்பினர்களும் அரசியில் இருந்து ஓய்வு.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகினால் அவருடன் பல உறுப்பினர்களும் அரசியில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளனர்.

கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் இந்த முடிவில் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் செயற்பட விரும்பவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து சமகால தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

அத்துடன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போட்டியிடப் போவதில்லை எனவும், வர்த்தக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பல சிரேஷ்ட உறுப்பினர்களே இந்த நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை தனக்கு வழங்குமாறு சஜித் பிரேமதாஸ கோரி வருகிறார். அவருக்கு 50இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்சியை விட்டு சிரேஷ்ட உறுப்பினர்கள் வெளியேறத் தீர்மானித்துள்ளமை சஜித்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.