ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோரை இன்று புதன்கிழமை (18) காலை புது டெல்லியில் சந்தித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திசாநாயக்க புது தில்லிக்கு சென்றுள்ளார். இதன்போதே இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்துள்ளார்.



