இணையத்தளத்தினூடாக கையொப்பம் சேகரிப்பினை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரும் தவத்திரு வேலன் சுவாமிகளால் 16.02.2026 நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அடக்குமுறைச் சட்டமாகக் கருதப்படும் 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” (பிஎஸ்டிஏ) எனும் புதிய சட்ட மூலத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது தயார் செய்துள்ளது.
ஆனால் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது தேர்தல் பரப்புரைகளின் போது ‘அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்போம்’ என உறுதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த புதிய வரைவு பழைய சட்டத்தை விடவும் அதிக அடக்குமுறைத் தன்மைகளைக் கொண்டிருப்பதாக சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இணையத்தளத்தினூடாக கையொப்பம் சேகரிப்பினை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரும் தவத்திரு வேலன் சுவாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.




