காவல்துறையினரை கைது செய்யக் கோரி சிறுவனின் சடலத்துடன் போராடிய உறவுகள்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (12)  வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “காவல்துறையினரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், காவல்துறையினரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது.