FWWM -அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட “ கண்ணிவெடிகள் இல்லாததாக உலகம்  ” (Foundation for a World Without Mines – FWWM) அமைப்பின் பிரதிநிதிகள் குழு, அண்மையில்  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட்டுள்ளது.

இந்த பிரதிநிதிகள் குழுவில், முகாமைத்துவ இணை இயக்குநர்  ஐரீன் ரோனர் மற்றும் அறக்கட்டளை நிர்வாக சபை உறுப்பினர் மைக்கேல் ப்ரௌமொல்லர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வடக்கில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டு வரும் DASH அமைப்பிற்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கும் இன்று வரை தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக கண்ணிவெடிகள் இல்லாததாக உலகம் அமைப்பினர் நிதியுதவி  அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.