நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று  புதன்கிழமை (11) காலை நானு ஓயா – ரதல்ல வீதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து  கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது தொழிலாளர்கள் ஜனாதிபதியை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது நாளாந்தச் சம்பளத்தை அதிகரித்து வழங்கியமைக்காகத் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தொழிலாளர்கள்,  ” ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமன்றி, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தங்களை நேரில் சந்தித்த ஒரே அரச தலைவரும் ஆவார் ” எனத் தெரிவித்தனர்.