மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் புதுடில்லியில் உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டது.
இந்தச் சந்திப்பில் இலங்கை–இந்தியா இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான நம்பிக்கையான மற்றும் உறுதியான பங்காளியாக இந்தியா தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பு குறித்து ‘X’ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜே.வி.பி. பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடல் சுமூகமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்ததாகத் தெரிவித்துள்ளதுடன், இரு நாடுகளுக்கிடையிலான ஆழமான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான நல்ல அடித்தளமாக இது அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளா



