டித்வா பேரழிவு: மலையக மக்கள் புறக்கணிப்பு!

டித்வா பேரழிவு, காலநிலை அனர்த்தங்களில் மலையக தமிழ் சமூகங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதை மீண்டும் உறுதி செய்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் மற்றும் பாதுகாப்பான மீள்குடியேற்றம் வழங்க அரசியல் விருப்பம் இல்லாததே முக்கிய பிரச்சினை என்றும், இது நிவாரணம் மட்டுமல்ல, சம குடியுரிமை மற்றும் சம பாதுகாப்பு தொடர்பான விடயம் என்றும் அவர் வலியுறுத்தினார்.